Monday 17 October 2011
Yoga Yuva Kendra: சி(பு)த்த குரு போதிதர்மன்
Yoga Yuva Kendra: சி(பு)த்த குரு போதிதர்மன்: yesterday in t.v ,i saw about speciality of "bodhi dharmar"in 7aam arivu.I read about him in wikipedia..please write about him master ,...
Monday 3 October 2011
தண்ணீர் பாட்டிலில் மர்ம எண்கள்!!!
நம்மில் பெரும்பாலோனோர் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்ளும்போது குடிப்பதற்கு பாட்டில் குடி நீரை உபயோகிப்போம் .
Aquafina,Kinley,Bislery மேலும் இது போல பல்வேறு கம்பெனிகளின் குடிநீர் பாட்டில்களை நாம் வாங்கி பயன்படுத்துகிறோம் .
இதில் எந்த கம்பெனி நல்ல கம்பெனி என்பதை நாம் ஆராய்வதுண்டு ஆனால் இந்த பாட்டில்களின் அடியில் பொறிக்கப்பட்டுள்ள மர்ம எண்களை நம்மில் பெரும்பாலோனோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை .
அனைத்து குடி நீர் பாட்டில்களின் அடி பாகத்திலும் 1 முதல் 7 வரையிலானஎண்களில் ஏதாவது ஒரு எண் பொறிக்கப்பட்டிருக்கும்.இந்த எண்கள் அந்த பாட்டில் எந்த வேதிப்பொருளை கொண்டு தயாரிக்கப் பட்டது என்பதை உணர்த்தும்.
கீழ் கண்ட படத்தில் எண்களும் அதற்கான வேதிப்பொருளின் பெயரும் இடம் பெற்றுள்ளது .
இந்த வேதிபொருட்கள் அனைத்துமே மனித உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியது .
இந்த பாட்டில்களிலுள்ள நீரை அருந்திவிட்டு எக்காரணம் கொண்டும் அதில் மீண்டும் வீட்டிலுள்ள நீரை நிரப்பி பயன்படுத்தக்கூடாது .அவ்வாறு பயன்படுத்தினால் உடலுக்கு பெரும் தீங்குகள் ஏற்பட வாய்ப்புள்ளது .
குறிப்பிடும்படியாக கிராமங்களில் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இதுபோன்ற பாட்டில்களில் குடி நீரை நிரப்பி பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள் .இதை முற்றிலும் தவிர்க்கவேண்டும் .
மேலும் புதிதாக வாங்கிய குடிநீர் பாட்டில்களையும் வெயில் படும் இடங்களில் வைக்கக்கூடாது .அப்படி வைத்தால் நீரில் வேதிப்பொருட்கள் எளிதில் கலந்துவிடும் .
இவற்றில் 1,3,6 ஆகிய எண்கள் பொறிக்கப்பட்டுள்ள பாட்டில்கள் மிகவும் தீங்கு விளைவிக்க கூடியவை .
ஆகவே இனிமேல் தண்ணீர் பாட்டில் வாங்கும்போது கம்பெனி பெயரை பார்த்து அடியிலுள்ள எண்களையும் கவனித்து வாங்குங்கள் .தண்ணீர் காலியானதும் சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் அதை அப்புறப்படுத்துங்கள்.
என்ன படிக்கலாம்
மாணவர்கள் எதிர் காலத்திற்கு ஓர் அற்புதமான வழி காட்டி இதோ !
பத்தாம் வகுப்பு மற்றும் +2 தேர்வு முடிவுகள் வெளி வந்து தற்போது மாணவர்கள் தங்களின் அடுத்த கட்ட படிப்பிற்கு ஆயத்தமாகி வருகின்றனர் .
இந்நிலையில் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் சில குழப்பங்கள் வரலாம்.அடுத்து என்ன படிப்பது அல்லது என்ன படிக்க வைப்பது ,சிறந்த எதிர் காலத்திற்கு உகந்த படிப்பு எது .என்ன படிப்பு படித்தால் என்ன வேலை கிடைக்கும் என்பது போன்ற கேள்விகள் எழும் .
இது போன்ற குழப்பங்களுக்கு தீர்வாக ஒரு அருமையான பட்டியல் காணக் கிடைத்தது .அதை இங்கே பகிர்கின்றேன் .
A\C கார் பயன்படுத்துபவர்கள் இதைப் படிங்க!
A \C கார் பயன்படுத்துபவரா நீங்கள் .அப்படியானால் நீங்கள் இதை கண்டிப்பாக படிக்கவேண்டும் .
A \C காரை பயன்படுத்தும்போது எப்போதுமே காருக்குள் நுழைந்தவுடன் A \C ஐ இயக்கி ஜன்னலை மூடக்கூடாது .காருக்குள் அமர்ந்தவுடன் காரின் ஜன்னல்களை ஒரு சில நிமிடங்களுக்கு திறந்து வைத்துவிட்டு அதன் பின்னர் தான் A \C ஐ இயக்கவேண்டும் .இது குறித்து நிகழ்த்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளில் பல அதிர்ச்சி உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன .
பொதுவாகவே அனைத்து கார்களுக்குள்ளும் அமைந்துள்ள DASHBOARD ,இருக்கைகள் மற்றும் காருக்குள் உள்ள அனைத்து பிளாஸ்டிக்கினால் ஆன பாகங்கள் பென்சீன் எனப்படும் கேன்சரை உருவாக்கும் நச்சை உமிழ்கின்றன .
சாதாரணமாக மனித உடல் ஏற்றுக்கொள்ளும் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 50 மில்லி கிராம் .
வீடுகளில் நிழலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காருக்குள் சதுர அடிக்கு 400 முதல் 800 மில்லி கிராம் என்ற அளவில் பென்சீன் இருக்கும் .
அதே வேளையில் வெயிலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காருக்குள் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 4000 மில்லி கிராம் வரையில் இருக்கும் .இது மனித உடல் ஏற்றுக்கொள்ளும் அளவை விட 40 மடங்கு அதிகம் .
இதன் காரணமாக கேன்சர் ,லுக்கூமியா ,சிறு நீராக பாதிப்பு கல்லீரல் பாதிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன .
கார்களிலுள்ள ஜன்னல்களை சிறிது நேரம் திறந்து வைப்பதனால் அதிகப்படியான பென்சீன் வெளியேறிவிடும் .
இதன் மூலமா நான் சொல்லிக்கிறது என்னண்ணா!
A \C காருல உக்காந்து போயி என்ஜாய் பண்ண விரும்புறவுங்க கொஞ்ச நேரம் ஜன்னல திறந்து காத்து வாங்கிட்டு அப்புறமா A \C ஐ ஆண் பண்ணி என்ஜாய் பண்ணுங்க
நீங்கள் எந்த நிலையில் தூங்குகிறீர்கள்?
BlogThis!Share to Twitterநீங்கள் உறங்கும் விதத்தை அடிப்படையில் கொண்டு உங்களைப்பற்றி சொல்ல முடியும். இங்கு ஒவ்வொரு நிலையிலும் உறநங்குபவர்கள் பற்றி எடுத்துக் கூறப்படுகின்றன. இவற்றில் நீங்கள் எந்த வகையினர் என்பதை பரிசீலித்துப் பாருங்கள்.
தலைமுதல் கால் வரையில் முழுமையாக போர்வையால் மூடிக் கொண்டு உறங்கும் பழக்கமுடையவர்கள்
பொதுமக்கள் மத்தியில் தைரியமான நபராக உங்களைக் காட்டிக்கொண்ட போதிலும், ஆழ் மனதின் அடிப்படையில் நீங்கள் பலவீனமான, கூச்ச சுபாவமுடையவர். அதிகளவான ரகசியங்களைப் பேணிப்பாதுகாப்பீர்கள். நீங்கள் ஏதேனும் பிரச்சினைகளை எதிர்நோக்கினாலும் அதனை வெளிப்படுத்தி உதவி கோராது, உங்களுக்குள்ளேயே பிரச்சினை மூடி மறைத்துக்கொள்வீர்கள். உங்களது உளநிலையையே தூங்கும் விதம் விபரிக்கின்றது.
கரங்களை உதவியாகப் பயன்படுத்தி, மல்லாந்து உறங்குபவர்
நீங்கள் கூடுதலான நுண்ணறிவையும், புதிய விடயங்களை அறிந்து கொள்வதில் நாட்டமும் உடையவர். சில வேளைகளில் எரிச்சலூட்டக் கூடிய எண்ணங்களைக் கொண்டிருப்பீர்கள், இதானல் மக்களால் உங்களை புரிந்துகொள்ள முடியாத நிலை ஏற்படும். உங்களது குடும்பம் பற்றி கூடுதல் சிரத்தை எடுத்துக்கொள்வீர்கள். எனினும், நீங்கள் மிகவும் அரிதாகவே எவர் மீதும் அன்பு கொள்வீர்கள்.
கால்களை ஒன்றுடன் ஒன்று பின்னி மல்லாந்து உறங்குபவர்
கால்களைப் பின்னி உறங்குபவர்கள் சுயநல எண்ணத்தைக் கொண்டவர்கள், தமக்கு விருப்பான முறையில் உலகம் இயங்க வேண்டும் என்பதே இவர்களின் நோக்கமாகும். மாற்றங்களை ஏற்றுக் கொள்வதற்கு உங்களினால் முடிவதில்லை. தனிமையாக இருப்பது உங்களுக்கு பிடிக்கும். விட்டுக்கொடுப்பதில் உங்களுக்கு உடன்பாடில்லை.
குறுகிய நிலையில் உறங்குபவர்
உங்களது கடந்த கால தோல்விகளினால் நீங்கள் பெரிதும் மன உலைச்சல் அடைந்திருப்பீர்கள். தனிமைப்படுத்தப்பட்ட மனோநிலையைக் கொண்டிருப்பீர்கள். உங்கள் வாழ்க்கையில் அன்பை இழந்து விட்டதாக மற்றவர்களுக்கு தெரியப்படுத்த விரும்புவீர்கள். எந்த நேரத்திலும் ஐயத்துடன் காணப்படுவீர்கள்.
ஒரு பக்கமாக குறுகி உறங்குபவர்
சுயநல, பொறமைக்கார மற்றும் பழிவாங்கும் குணங்களை உடையவராக உங்களை விபரிக்க முடியும். உங்களைச் சுற்றியிருப்பவர்கள் மிகவும் நிதானமாக செயற்பட வேண்டும். மற்றவர்களினால் எடுக்கப்படும் தீர்மானங்கள் உங்களை அதிகமாக கோபப்பட வைக்கும்.
ஒரு காலை மடக்கி ஒரு பக்கமாக உறங்குபவர்
எப்போதும் எதைப் பற்றியாவது முறைப்பாடு செய்வதே உங்களது வாடிக்கையாக அமைந்திருக்கும். பதற்றக்காரர் என்பதனை உங்களது புனைப்பெயராக சூட்ட முடியும். சிறிய விடயங்களினால் கூட நீங்கள் பதற்றமடைந்து கோபப்படக்கூடும். வாழ்க்கை என்பது பாரிய விடயமல்ல, இலகுவாக வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.
ஒரு கையை மடக்கி ஒரு பக்கமாக உறங்குபவர்
ஒரு காலை மடக்கி உறங்குபவருக்கு நேர் எதிரான குணங்களை நீங்கள் கொண்டிருப்பீர்கள். பண்பான, நேர்மையான, அன்பானவராக திகழ்வீர்கள். எதிலும் முழுமை இருக்காது. தன்நம்பிக்கையை வளர்த்துக் கொள்வதற்கும், பிழைகளிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்வதற்கும் பழகிக்கொண்டால் வாழ்க்கையில் எப்போதும் வசந்த வீசும்.
ஒரு பக்கமாகவே உறங்குபவர்
நீங்கள் தன்நம்பிக்கையுடைவர், என்ன காரியத்தை எடுத்தாலும் அதில் வெற்றி காண்பது உங்களது வாடிக்கை. வலது பக்கமாக, வலது கரத்தை மடக்கி தலை சாய்த்து உறங்குவோர் அதிகாரம் மற்றும் அதிஸ்டத்தினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
கை மற்றும் கால்களை விரித்து மல்லாந்து உறங்குவோர்
நீங்கள் சுதந்திரத்தை விரும்பும் ஓர் ஆத்மா. வசதிகளை விரும்பும், அன்பை வழிபடும் நபராக நீங்கள் திகழ்வீர்கள். எனினும், நீங்கள் அடுத்தவர்களின் விடயங்கள் பற்றி குறை கூறுவதில் நாட்டமுடையவர்களாக காணப்படுவீர்கள்.

Subscribe to:
Posts (Atom)